கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டுவிட்டு... கொரோனா முகாமில் தவிக்கும் இளம் மருத்துவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஹொங்ஹொங்கில் கொரோனா முகாமில் சிகிச்சை அளித்துவரும் இளம் மருத்துவர் ஒருவர் தமது கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து கவனிக்க முடியாமல் போனது தொடர்பில் கவலையை வெளியிட்டுள்ளார்.

ஹொங்ஹொங்கில் கொரோனா முகாமில் தன்னார்வலராக பணியாற்றி வருபவர் 38 வயதான மருத்துவர் ஆல்பிரட் வோங்.

கொரோனா தொற்று தொடர்பில் சந்தேக நபர்களுக்கு இவர் சிகிச்சை அளித்து வருவதால், தமது கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து கவனிக்க முடியாமல் போனதாக கவலை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதுடன், தமது குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பதே அவர்களுக்கு செய்யும் உதவி என கூறியுள்ளார் மருத்துவர் ஆல்பிரட் வோங்.

பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா முகாமில் சேர்ந்ததிலிருந்து, வோங் தனது மருத்துவமனையின் நடை தூரத்தில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்கியிருந்து வருகிறார்.

மட்டுமின்றி நோய் பரவாமல் இருக்க தனது தலைமுடியை ராணுவ வீரர்கள் போன்று வெட்டியுள்ளார்.

இந்த காதலர் தினத்தில் இருவருக்கும் விருப்பமான உணவம் ஒன்றில் வேறு வேறு மேஜைகளில் தூரத்தில் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்ற ஆசை இருவருக்கும் இருப்பதாகவும் மருத்துவர் வோங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கிட்டத்தட்ட 1,400 பேர் கொரோனா வியாதிக்கு பலியான நிலையில், குறித்த வியாதிக்கு சிகிச்சை அளித்துவரும் வோங் போன்ற நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதேபோன்ற குடும்பப் பிரிவினைகளைச் சந்திக்கின்றனர்.

ஹொங்ஹொங்கில் இதுவரை 58 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கொரோனா பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹொங்ஹொங் நகரில் பெரும்பாலான மருத்துவமனைகள் மக்களால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் உள்ள 60 சதவிகித தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்