வெளிநாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதாக கூறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் மருத்துவரை சந்திப்பதற்காக வரிசையில் நிற்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி நடித்த பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரேசிலின் Rio de Janeiro-வை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க Claudia Maria Rosa da Silva என்ற பெண் அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கூட்டத்தைக் கண்ட அவர், நான் சமீபத்தில் தான் ஹொங்ஹொங்கிற்கு சென்று திரும்பினேன்.

இதனால் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது போன்ற அறிகுறி இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டார்.

அவரை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் சோதனை செய்த போது, அவர் ஹொங்காங்கிற்கே செல்லவில்லை, கொரோனா வைரஸ் பாதிப்பும் இல்லை, வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காகவே இப்படி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Claudia Maria Rosa da Silva/(Image: CEN)

இது குறித்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி ஏமற்றியதால், அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் Latin America சுற்றியிருக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லை, இந்த நிலைமையை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்