காட்டுக்குள் தனியாக சிக்கிய காட்டு மான்... சிங்கங்களின் பசிக்கு இரையான கதி கலங்க வைக்கும் காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
448Shares

காட்டு மானை பசியில் இருக்கும் சிங்க கூட்டங்கள் கொடூரமாக அடித்து சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்போரை கதிகலங்க வைக்கிறது.

தென் ஆப்பிரிக்காவின் Kruger தேசிய பூங்காவில் இருக்கும் Kambaku ஆற்றின் அருகிலே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 6-க்கும் மேற்பட்ட சிங்கங்கள், காட்டு மான் ஒன்றை கடித்து கீழே தள்ளிவிட்டு, அதை கடித்து குதறுகின்றன.

அந்த சிங்க கூட்டங்கள், எந்தளவிற்கு பசியில் இருக்கின்றன என்பதை அதில் பார்க்க முடிகிறது. இப்படி சிங்ககூட்டங்கள் கடிப்பதற்கு மத்தியிலும் உயிர் தப்பிக்க அந்த காட்டு மான் துடி துடிக்கிறது, அப்போது ஒரு சிங்கம் அந்த காட்டு மானின் கண்ணை அப்படியே கடிக்கிறது.

குறித்த வீடியோ முதலில் safari lodge’s என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. அதன் பின் இந்த வீடியோ தற்போது Kruger National Park என்ற யூ டியூப் சேனில் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்