நீங்க பத்திரமாக இருங்க... முகமூடி போட்டுக்கோங்க! சீனாவில் கொரோனாவால் தாய்-மகன் பேசும் உணர்ச்சி மிகு காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து வரும் செவிலியர் தாயிடம், அவருடைய மகன் வீடியோ காலில் உணர்ச்சிமிக்க பேசியது வைரலாகி வருகிறது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தற்போது வரை 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, வுஹானில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் விரும்பினால், வுஹான் பகுதிக்கு வந்து சிகிச்சை அளிக்கலாம் என்று அரசு தெரிவித்திருந்தது.

அதன் படி சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வுஹானுக்கு சென்றனர்.

அப்படி வுஹானில் இருக்கும் தாய் செவிலியரிடம் மகன் வீடியோ காலில் பேசும் காட்சி வெளியாகியுள்ளது. அதில், சிறுவன் நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்று கூற, அதற்கு அவரும் நானும் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று கூறுகிறார்.

அதன் பின் தாய் செவிலியர் என் மீது உனக்கு கோபம் எதுவும் இருக்கிறதா என்று கேட்க, உடனே அதெல்லாம் இல்லை, நீங்கள் எவ்வளவு வேலையில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

உங்களை தற்காத்து கொள்ளுங்கள், முக மூடி அணிந்து கொள்ளுங்கள் என்று சிறுவன் அன்போடும், பாசத்தோடும் தாயிடம் பேசி முடிக்கிறான்.

சீனாவில் இருக்கும் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஹீரோக்கள் என்று புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers