ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 15 குழந்தைகள் உடல்கருகி பரிதாப பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஹைட்டி நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உடல்கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே ஃபெர்மேட் நகரில் உள்ள 'சர்ச் ஆஃப் பைபிள்' என்கிற ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பதினைந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு 9 மணியளவில்(உள்ளூர் நேரப்படி), ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றில் ஏற்பட்ட சிக்கல்களால் சிறார்கள் ஒளிக்காக மெழுகுவர்த்திகளை பயன்படுத்தியுள்ளனர்.

அப்போது தீ பற்ற ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டும், தீயணைப்பு வீரர்கள் வந்துசேர 1.30 மணி நேரம் ஆகியுள்ளது.

அதற்குள்ளாக குழந்தைகள் பலரும் உள்ளேயே சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களில் தற்போது 13 பேரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் அனைவரும் 3 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் என பாப்டிஸ்ட் மருத்துவமனையின் மருத்துவர் கேடியானா ஜோசப் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers