இராணுவ வீரர்களுடன் நடுவானில் சுட்டுவீழ்த்தப்ட்ட ஹெலிகாப்டர்: அனைவரும் பலி..!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இட்லிப் மாகாணத்தில் சிரியா அரசுக்கு சொந்தமான மற்றொரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11ம் திகதி இட்லிப் நகரத்தில் உள்ள அல்-நயராப் வன்வெளியில் பறந்துக்கொண்டிருந்த சிரியா இராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றதோடு, சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களே ஆகியிருக்கும் நிலையில், வடமேற்கு சிரியாவில் மற்றொரு இராணுவ ஹெலிகாப்டர் நேற்று கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

மேற்கு கிராமப்புற அலெப்போவில் உள்ள உரம் அல்-குப்ரா நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை மதியம் 1.40 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாக சிரிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக SANA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய விடுதலை முன்னணி கிளர்ச்சிக் குழு பொறுப்பேற்றிருப்பதாக டெலிகிராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

துப்பாக்கிச் சூட்டில் எரியும் ஹெலிகாப்டர் தரையில் மோதிய காட்சிகளை சிரிய தேசிய கூட்டணி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு முன்னர் அசாத் ஆட்சியின் ஹெலிகாப்டர் பொதுமக்கள் வீடுகளில் குண்டுவீச்சு நடத்தியதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers