பாம்புகளில் இருந்து கொரோனா பரவவில்லை! இந்த விலங்கின் மூலமே வருகிறது! பலரும் எதிர்பாராத புதிய திருப்பம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிர்கொல்லி வைரஸால் 67000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று தெரியவந்தது.

சீனாவின் வுகான் நகரில் கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ் தொற்று பரவியது.

சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என கூறினார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸானது வௌவாலிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கவே பெரும்பாலான வாய்ப்பிருப்பதாக சீனாவின் அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

மேலும் எறும்புண்ணி மூலமாகவும் கொரோனா பரவுகிறதா என ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்