இரவு வேலை... கொரோனா பீதி: மருத்துவர் மனைவியை ரகசியமாக தொடர்ந்த சீன கணவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் இரவு பணிக்கு செல்லும் மருத்துவர் மனைவியை சீனத்து கணவர் ஒருவர் பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கும் காட்சி ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வியாதியால் பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை கொரோனா வியாதிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,185 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள் 8,410 எனவும் இதுவரை மரணமடைந்தவர்கள் 1,526 எனவும் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வுஹான் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தமது மருத்துவர் மனைவியை இரவு பணிக்கு அனுப்பி வைக்கும் கணவர், பாதுகாப்பு கருதி அவரை ரகசியமாக தொடரும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

கொட்டும் மழையில் சாலையில் நடந்து செல்லும் அந்த மருத்துவரை வாகனம் ஒன்றில் கணவர் தொடர்கிறார்.

பாதுகாப்பு கருதி அதே காரில் கணவருடன் அந்த மருத்துவர் பயணம் செய்வதை தவிர்த்துள்ளார்.

அதிகாலையில் அந்த மருத்துவர் தனது மருத்துவமனைக்கு பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்த, அவரது அன்பான கணவர் அவளைப் பின்தொடர,

தனது கணவர் பின்தொடர்வதை அந்த மருத்துவர் அறிந்திருக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

இந்த வீடியோவை அந்த கணவரே தமது காரில் இருந்தபடி பதிவு செய்துள்ளார். கடந்த வியாழனன்று நடந்த இச்சம்பவம் தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்