கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வங்கிகளில் எடுக்கப்படும் நடவடிக்கை: வெளியாகியுள்ள வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
#S

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அடைத்து வைக்கப்படுவது மனிதர்கள் மட்டுமில்லை என்பதை காட்டியுள்ளது, வெளியாகியுள்ள வீடியோ ஒன்று.

ஆம், பயன்படுத்தப்பட்ட பணமும் சீன வங்கிகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அடைத்து வைக்கப்படுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது. புற ஊதாக்கதிர்கள் அல்லது அதிக வெப்பம் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படும் பணம், 14 நாட்கள் வரை அறைகளில் அடைத்து வைக்கப்படுகிறதாம்.

அதாவது, பணம் மூலமாக கொரோனா தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக, வங்கிகள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, 4 பில்லியன் யுவான் நோட்டுக்களை சீன மத்திய வங்கி வுஹானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை. காரணம், பெரும்பாலான சீனர்கள் மொபைல் மூலம்தான் பணப்பரிமாற்றம் செய்கின்றனர்.

2017இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், சீனர்களில் முக்கால் வாசிப்பேர், ஒரு மாதம் முழுமைக்கும் வெறும் 100 யுவான்களை மட்டுமே நோட்டுகளாக வைத்துக்கொண்டு தங்களால் சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்