மனைவியின் உயிரை காக்க கடைசிவரை போராடிய கணவருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற போராடிய கணவர் தீக்காயத்தால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 32 வயது அனில் நினன் தமது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி மாகாணத்தில் குடியிருந்து வந்துள்ளார்.

கடந்த திங்களன்று இரவு இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்றும் நோக்கில் அனில் போராடியுள்ளார்.

இதில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் கலீஃபா பொது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

90 சதவிகித காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சையில் இருந்து வந்த அனில், தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மனைவி நீனு ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனில் நினனின் திடீர் மறைவு அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்