கொரோனா வைரஸ்: 3700 பயணிகளுடன் ஜப்பானில் நிற்கும் கப்பல் பயணிகளில் இருவர் பலி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
#S

ஜப்பான் கடற்பகுதியில் 3700 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் பயணித்த இரு பயணிகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டைமண்ட் பிரின்சஸ் என்னும் அந்த பயணிகள் கப்பல் ஹொங்ஹொங்கில் இருந்து வந்ததால், அதிலிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற அச்சத்தால் அந்த கப்பல் 14 நாட்களாக மருத்துவக் கண்காணிப்பில் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கப்பலில் பயணித்தவர்களில் 620 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இருவரும் 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் பெப்ரவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் சிகிச்சைக்காக கப்பலில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...