கடத்தி செல்லப்பட்ட இந்து சிறுமியின் திருமணம் செல்லாது- பாகிஸ்தான் நீதிமன்றம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் கடத்தி செல்லப்பட்டு மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் திருமணம் செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாதைச் சோ்ந்த மெஹாக் குமாரி என்கிற 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, அலி ராஜா சோலங்கி என்பவரால் கடந்த ஜனவரி 15ம் திகதி கடத்தி செல்லப்பட்டார்.

அவரை இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்ததுடன், வலுக்கட்டாயமாக திருமணமும் செய்துகொண்டதாக குமாரியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கானது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 15 வயதான குமாரிக்கு திருமணம் செய்து வைப்பது சிந்து குழந்தைகள் திருமணச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4-ன் கீழ் தவறு என்று நீதிபதி குலாம் அலி கனாஸ்ரோ தெரிவித்தாா். மேலும், அந்தத் திருணம் செல்லாது எனவும் அறிவித்தாா்.

முன்னதாக, சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்த 14 வயது ஹுமா என்ற பெண் கடந்த ஆண்டு அக்டோபா் இதே போல் மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவத்தில், அந்தத் திருமணம் செல்லும் என்று சிந்து உயா் நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...