குழந்தைகள் வாழ தகுதியான, செழிப்பாக வளரும் நாடுகளின் பட்டியல்! இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா? இந்தியாவை முந்தியது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

குழந்தைகள் வாழத் தகுதியான மற்றும் செழிப்பாக வளரக்கூடிய நாடுகள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டன. இந்தப் பணியில் உலகம் முழுவதிலிருந்து 40-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.

உடல்நலம், கல்வி, ஊட்டச்சத்து போன்ற குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளைப் மதிப்பீடு செய்து 180 நாடுகளை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் நோர்வே முதலிடத்தில் உள்ளது, தென் கொரியா இரண்டாமிடத்திலும், நெதர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.

நான்காம் இடத்தில் பிரான்ஸ், ஐந்தாம் இடத்தில் அயர்லாந்து, ஆறாவது இடத்தில் டென்மார்க், ஏழாவது இடத்தில் ஜப்பான், எட்டாவது இடத்தில் பெல்ஜியம், ஒன்பதாவது இடத்தில் ஐஸ்லாந்து, பத்தாவது இடத்தில் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

இலங்கை இப்பட்டியலில் 68வது இடத்தில் உள்ளது, இந்தியா 131வது இடத்தில் உள்ளது, கனடாவுக்கு 21வது இடம் கிடைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்