ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர்!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் மேலும் 8 பேரை மணக்கவுள்ளதாக கூறி அதிரவைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Mthembu (50) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 6 இளம்பெண்களை மணந்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்த திருமணத்துக்காக 84,04,123.00 (இலங்கை மதிப்பில்) செலவு செய்துள்ளேன். மேலும் இரண்டு பேரை மணக்க இருந்தேன். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு தயாராகாததால் மணக்க முடியவில்லை.

இந்த ஜூன் மாதம் 2 பேரை மணக்கவும் அடுத்தாண்டு மேலும் 6 பேரை மணக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

திருமண ஏற்பாடுகள் திருப்தியாக இருந்ததாக உறவினர்களும் நண்பர்களும் கூறினார்கள். இரவில் எந்த மனைவியுடன் தூங்குவேன் என கேட்கிறார்கள், அதை நான் முடிவு செய்வேன்.

இதில் என் மனைவிகளுக்கு சர்ப்பரஸ் தருவேன், ஆனால் என் மனைவிகளை எந்த நிலையிலும் ஏமாற்ற மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்