குப்பை தொட்டியில் நிர்வாணமாக கண்டுடெக்கப்பட்ட சிறுமி! சம்பவத்துக்கு முன் நடந்தது என்ன? அதிரவைத்த சிசிடிவி காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 7 வயது சிறுமி நிர்வாண நிலையில் குப்பை தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Fatima Cecilia Aldriguett Anton (7) என்ற மாணவி கடந்த 11ஆம் திகதி பள்ளிக்கூடம் முடிந்த நிலையில் தனது அம்மாவுக்காக காத்திருந்தாள்.

பின்னர் Fatima-வின் தாய் அங்கு வந்த போது மகளை காணவில்லை.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிறுமி Fatima-வின் சடலம் நிர்வாண நிலையில் பைக்குள் அடைக்கப்பட்டு குப்பை தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் சிறுமியின் உடையும், அதிகளவில் இரத்தமும் இருந்தது.

இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Fatima அம்மாவுக்காக காத்திருந்த போது Gladis Giovana என்ற இளம்பெண் அங்கு வந்து சிறுமியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதன் பின்னர் Gladis Giovana மற்றும் Mario Alberto என்ற ஆணும் சேர்ந்து சிறுமியை மிகவும் கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிசார் கூறுகையில் Gladis Giovana மற்றும் Mario Alberto ஆகியோரை கைது செய்துள்ளோம்.

சிறுமி Fatimaவின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் தான் காதலர்களான Gladis Giovana மற்றும் Mario Alberto ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

சிறுமிக்கு, Gladis Giovana ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவருடன் சென்றிருக்கிறாள். கைது செய்யப்பட்ட இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது, மற்ற விபரங்கள் பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.

CEN

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...