கொரோனா வைரஸ் ‘நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவாக’ இருக்கும்: எச்சரிக்கும் யூத மதகுரு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனா கொரோனா வியாதியால் மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், இனி பசியால் அந்த நாடு பேரிழைப்பை சந்திக்கும் என யூத மத குரு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகை அடுத்து பல நூறு ஆண்டுகளுக்கு அதன் கடினமான காலங்களில் மூழ்கடிக்கும் என்று யூத மத குரு ஒருவர் கூறியுள்ளார்.

யோசெப் பின்றோ என்ற அந்த மத குரு கொரோனா வைரஸ் தொடர்பில் எபிரேய பைபிளில் எசேக்கியேல் புத்தகத்தில் கணிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகின் அதிக சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட இருப்பதாக ஜனவரி மாதம் தமக்கு அருள்வாக்கு கிடைத்ததாகவும் அவர் நினைகூர்ந்துள்ளார்.

தற்போது மொராக்கோவில் வசிக்கும் யோசெப் பின்றோ, கொரோனா பேரழிவு என்பது ஹோலோகாஸ்ட்டை விடப் பெரியதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

(Image: Wikipedia)

சீனாவின் வுஹான் நகரில் இருந்து தோன்றிய இந்தப் பேரழிவானது தற்போது உலகளாவிய பேரழிவாக வளர்ந்து வருகிறது, இதன் விளைவுகள் உலகின் எல்லா மூலைகளிலும் சென்றடையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் கொரோனா வியாதிக்கு தப்பியவர்கள், அடுத்து வரவிருக்கும் பசி பட்டினியால் மரணமடைவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விரைவில், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும், பாதுகாப்புப் படையினரும் தனிமைப்படுத்தலில் இருப்பதை உணர்ந்து அவர்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள்.

இதனால் மக்கள் வீதிக்கு வரும் சூழல் உருவாகும். தொடர்ந்து சூறையாடல் உள்ளிட்ட அக்கிரமங்கள் அரங்கேறும் வாய்ப்பும் உண்டு என யூத மதகுரு யோசெப் பின்றோ எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்