கண்டெய்னருக்கு கீழிருந்து வந்த சத்தம்: பொலிசார் கண்டுபிடித்த பிரமாண்ட குற்றம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1262Shares

ஸ்பெயினில், கண்டெய்னர் ஒன்றின் அருகில் இருந்த திறப்பின் வழியாக நுழைந்த பொலிசார், தரைக்குக் கீழ் ஒரு பெரிய தொழிற்சாலையே ரகசியமாக இயங்கிவந்ததைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.

பிரித்தானிய சிறை ஒன்றிலிருந்து தப்பி தலைமறைவான டேனியல் டாப்ஸ் என்பவனை பொலிசார் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவன் ஸ்பெயினில் வேறு பெயரில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி The National Crime Agency அதிகாரிகள் ஸ்பெயினுக்கு சென்று டேனியலைக் கைது செய்துள்ளனர்.அது குறித்து பொலிசார் குதிரைகள் அடைத்துவைக்கப்படும் இடம் ஒன்றில் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது அந்த கண்டெய்னருக்கு அருகே ஒரு சிறு திறப்பிடம் இருப்பது தெரியவந்துள்ளது.அதன் வழியாக படிக்கட்டுகள் கீழிறங்குவதைக் கண்ட பொலிசார் உள்ளே இறங்க, அங்கு ஒரு பிரமாண்ட சிகரெட் தொழிற்சாலையே இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.

டேனியலும் மேலும் 19 பேரும் இணைந்து அந்த சிகரெட் தொழிற்சாலையை நடத்திவந்தது தெரியவந்தது.அந்த பிரமாண்ட தொழிற்சாலையில், வாரம் ஒன்றிற்கு அரை மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போலி சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

அந்த இடத்திலிருந்து 153,000 சிகரெட் பாக்கெட்கள், 17,600 கிலோ புகையிலை, 20 கிலோ கஞ்சா பிசின் மற்றும் 144 கிலோ மரிஜுவானா என்ற போதைப்பொருள் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 3,500 சிகரெட்களை உருவாக்கும் திறன் வாய்ந்ததாகும்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்கள், இப்படி ஒரு ரகசிய தொழிற்சாலை இருப்பதையும் அதற்குள் ஆறு உக்ரைனியர்கள் வேலை செய்வதையும் குறித்து எதுவும் கூறவில்லையாம்.

பொலிசாரின் தொடர் விசாரணையின் பலனாக அந்த ஆறுபேரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

உண்மையில், அந்த ரகசிய தொழிற்சாலைக்குள் ஆக்சிஜனை வழங்கும் இயந்திரம் ஒன்று திடீரென பழுதாக, மூச்சு விட தவித்த அந்த ஆறு ஊழியர்களும் திணறி தவித்துதான் அந்த அறையின் சுவர்களில் தட்டி ஓசை எழுப்பியிருக்கிறார்கள்.

பொலிசார் அவர்களை கவனிக்கவில்லையென்றால், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும்.டேனியல் ஏற்கனவே போதை குற்றத்திற்காகத்தான் கைது செய்யப்பட்டு சிறையிகடைக்கப்பட்டிருந்தான்.

சிறையிலிருந்து தப்பியும், ரகசியமாக ஸ்பெயினுக்கு சென்று மீண்டும் அதே தொழிலை வேறு மாதிரி தொடங்கியிருக்கிறான்.

தற்போது டேனியல் உட்பட இந்த குற்றத்தில் பங்குடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். டேனியல் தவிர வேறு யார் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்