உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான மருந்து எப்போது வரும்? சீனா சொன்ன முக்கி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸிற்கு சீனா தயாரித்து வரும் மருத்து எப்போது சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டு அமைச்சர் ஜு நான்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. சார்ஸை விட இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

இந்நிலையில் நேற்று சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் அமைச்சரான ஜூ நான்பிங் கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்துவதற்கான மருந்து வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அறிவியல் அகாடமியின் துணை பொதுச்செயலாளர் குய், மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பணிச்சூழலில் போதிய காற்றோட்டமும் இடைவெளியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துவிடக்கூடும் என சீன சுகாதார ஆணையக் குழுவின் தலைவரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான ஜோங் நான்ஷான் கூறியிருக்கிறார்.

83 வயதாகும் ஜோங் நான்ஷான், 2003ஆம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்