சகோதரி இறந்துட்டா! இறுதிச்சடங்குக்கு பணம் வசூலித்த நபர்.. தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்ட அப்பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

17 வயது சிறுமியான தனது தங்கை இறந்துவிட்டதாக கூறி மர்மநபர் இறுதிச்சடங்குக்கு பணம் வசூலித்து வந்த நிலையில் நான் உயிருடன் இருக்கிறேன் என அந்த சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு தேவையான பணம் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை பெறுவதற்கு ஓன்லைன் மூலம் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யப்படுவது வழக்கம்.

அப்படி நபர் ஒருவர் Hani Yusuf என்ற தனது 15 வயது சகோதரி பிரித்தானியாவில் வசித்த போது உயிரிழந்துவிட்டதாக நிதி வசூலிக்கும் பக்கத்தில் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தங்கள் குடும்பம் கடனில் உள்ளதால் நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரினார்.

இதையடுத்து நிதி குவிய தொடங்கியது, அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமியே இந்த அறிவிப்பை பார்த்தது தான் இந்த விடயத்தில் அதிரடி திருப்பமாக அமைந்துள்ளது.

அதாவது, அந்த சிறுமி உண்மையில் உயிரோடு உள்ளார், அமெரிக்காவில் வசிக்கும் அவரின் நிஜப்பெயர் Safia Barkadle ஆகும், 17 வயது சிறுமியான அவர் புகைப்படத்தை விஷமிகள் சில இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்து அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியிட்டு நிதி வசூலித்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து பதறியபடியே Safia Barkadle டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், மோசடி நபருக்கு நிதி வழங்குவதை நிறுத்துங்கள், நான் உயிருடன் இருக்கிறேன், இறக்கவில்லை. என் புகைப்படத்தை பயன்படுத்தி பெரும் மோசடி நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இதுவரையில் £5,300 பணம் வசூலாகியுள்ள நிலையில் நிதி வசூலிக்கும் இணையதள பக்கமான GoFundMe தற்போது விடயத்தை உணர்ந்து Hani Yusuf தொடர்பான பக்கத்தை முடக்கியுள்ளது.

இதோடு நிதி கொடுத்தவர்களுக்கு அந்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்