மாஸ்க் அணிந்து முத்தமிட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான மணமக்கள்: கொரோனா தாக்கிய பிலிப்பைன்சில் சுவாரஸ்ய நிகழ்வு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் திரள் திரளாக மணமக்கள் கூடி திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இம்முறை Bacolod என்ற இடத்தில் கூடி திருமணம் செய்துகொண்ட 220 ஜோடிகளையும், மாஸ்குகளை அணிந்துகொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், கடந்த 14 நாட்கள் மணமக்கள் எங்கிருந்தார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கும் பயண விவர படிவம் ஒன்றையும் நிரப்ப கோரப்பட்டிருந்தது.

அதன்படி, திருமணம் செய்துகொண்ட 220 ஜோடிகளும் மாஸ்குகளுடன் முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், வெண்ணிற ஆடை அணிந்த மணப்பெண்கள், வெண்ணிற சட்டை அணிந்த மணமகன்கள் என அனைவரும் நீல நிற மாஸ்குகளை அணிந்துகொண்டு திருமண விழாவில் பங்கேற்பதைக் காணலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்