என்னை ஏன் சீக்கிரம் எடுத்தீர்கள்? மருத்துவரை முறைத்து பார்க்கும் குழந்தை: பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரை முறைத்துப் பார்க்கும் ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியாகி, பார்த்ததும் சிரிப்பை பீறிட்டு வரச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் பிறந்ததும் அழும். அவை அழுதால்தான் அவர்களது நுரையீரல் நன்றாக இயங்குகிறது என்று அர்த்தம். அதற்காக மருத்துவர்கள் அழாத குழந்தையின் பிட்டத்தில் ஒரு தட்டு தட்டியாவது குழந்தையை அழவைப்பார்கள்.

ஆனால், ஒரு குழந்தை பிறந்ததுமே, தான் பிறப்பதற்கு உதவிய மருத்துவரை முறைத்துப் பார்த்துள்ளது.

ரியோ டி ஜெனிரோவிலுள்ள மருத்துவமனையில், பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி சிசேரியன் முறையில் பிறந்தாள் இசபெல்லா பெரைரா டி ஜீசஸ்.

பிறந்ததும் அழாமல் இருந்த இசபெல்லாவை அழ வைக்க மருத்துவர்கள் முயற்சிக்க, அழாமல் அவர்களை முறைத்துப் பார்க்கிறாள் இசபெல்லா.

என்னை ஏன் அழ வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று கேட்க நினைத்தாளோ, அல்லது 20ஆம் திகதி பிறக்க வேண்டிய என்னை ஏன் சீக்கிரமாக அம்மா வயிற்றிலிருந்து வெளியே எடுத்தீர்கள் என்று கேட்க நினைத்தாளோ தெரியாது, அழாமல் மருத்துவரை முறைத்துப் பார்த்திருக்கிறாள் இசபெல்லா.

பின்னர், அவளது தொப்புள் கொடிய மருத்துவர்கள் வெட்டியபிறகுதான் அழுதிருக்கிறாள் அவள்.

தங்கள் மகள் உலகுக்கு வரும் அந்த அற்புத நிகழ்வை படம் பிடிப்பதற்காக தொழில்முறை புகைப்படக்காரர் ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இசபெல்லாவின் பெற்றோர். அவரது கமெரா இந்த அற்புத காட்சியை அழகாக படம் பிடித்திருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்