என் உடலை இங்கு அடக்கம் செய்யுங்க.. நான் இனி வரமாட்டேன்: வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தா, தனக்கும் தமிழ் நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை, இனி நான் அந்த பக்கம் வரப்போவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் பொலிசார் அவரை தேடிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய இவர், அங்கிருக்கும் குட்டித் தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாச என்று பெயர் வைத்து, வாழ்ந்து வருகிறார்.

இந்தியா பொலிசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசி நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அதே போன்று தன்னுடைய மரணத்திற்கு பின்னர் தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டதாகவும், தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும் என்றும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், தமிழகத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, தமிழகத்திற்கு இனிமேல் வரப்போவதில்லை. தமிழக ஊடககங்களை பொறுத்தவரை தான் இறந்து விட்டேன், தான் இறந்தாலும் தனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...