மரண பயத்தில் நாடே நடுங்கி கொண்டிருக்க.. இறைச்சிக்காக முதியவர் செய்த கொடூரம்: திட்டி தீர்க்கும் மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்
692Shares

சீனாவில் முதியவர் ஒருவர் வெட்ட வெளியில் பூனையை கொன்ற இறைச்சிக்காக தோல் உரித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019 டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று உலக முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய வைரஸ், குறிப்பாக வௌவால், பாம்பு காட்டு விலங்குகளின் இறைச்சியிலிருந்து மனிதர்களுக்கு பரவியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் உயர்மட்ட சட்டமன்றக் குழு திங்களன்று அனைத்து வர்த்தகம் மற்றும் காட்டு விலங்குகளின் நுகர்வு தடைசெய்யும் திட்டத்தை நிறைவேற்றியது.

கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்னர், கடந்த மாதம் நாடு முழுவதும் காட்டு விலங்குகளின் நுகர்வுக்கு சீனா தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.

நோயை எதிர்த்து அரசு இவ்வாறு போராடி வரும் நிலையில், வுஹான் நகரில் முதியவர் ஒருவர் ஆட்டு இறைச்சி கடைக்கு வெளியே, பூனையை கொன்ற தொங்கவிட்டு தோல் உரித்துக்கொண்டிருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்சி சீனா சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், முதியவர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பூனையின் தோலை உரிக்கிறார்.இதைக்கண்ட மக்கள் அந்த முதியவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்