பிரதமர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி? வெளியான உண்மை பின்னணி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்-ன் பிரதமர் பீட்டர் பெல்லிகிரினி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் ஸ்லோவாக் பிரதமர் பீட்டர் பெல்லிகிரினி கலந்து கொண்டார்.

அவர் நாடு திரும்பியதும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரஸ்ஸல்ஸில் பெல்லிகிரினிக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், அதனால் தான் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.

மேலும், எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதி ஸ்லோவாகில் பொதுத்தேர்தலில் நடைபெறவுள்ள நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பெல்லிகிரினி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை பிராட்டிஸ்லாவாவில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பெல்லிகிரினி வெளியிட்டார்.

நாளை, எல்லாவற்றையும் மீறி, நான் பணிக்கு திரும்ப முடியும் என்று நான் நம்புகிறேன் என திங்களன்று அவர் மற்றொரு செய்தியை வெளியிட்டார்.

இந்நிலையில், ஸ்லோவாக் பிரதமர் பீட்டர் பெல்லெக்ரினியின் அலுவலகம் திங்களன்று அவரது உடல்நலம் குறித்து தெளிவுப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், அவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக பரவும் வதந்தியை முற்றிலுமாக மறுத்தது.

மேலும், பிரதமருக்கு சோர்வாக இருக்கிறது, நிமோனியா உள்ளது, ஆனால் அவ்வளவுதான் என்று வதந்திகளைப் பற்றி கேட்டபோது ஸ்லோவாக் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாட்ரிசியா மேசிகோவாகூறினார்.

இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பரவும் புரளி ட்வீட்களை நான் உறுதியாக மறுக்கிறேன். இவை அனைத்தும் முட்டாள்தனமானது என பீட்டர் பெல்லிகிரினி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்