சொர்க்கத்தில் உள்ள தந்தையை பார்த்தேன்! சடலமாக இருந்து மீண்டும் உயிர்பெற்ற பெண் கூறிய அதிரவைக்கும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உக்ரைனில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில், தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ளார்.

Stryzhavka நகரை சேர்ந்த Ksenia Didukh என்ற 83 வயது மூதாட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குடும்பத்தார் மருத்துவர்களை வீட்டுக்கு வரவழைத்தனர்.

அங்கு Ksenia-ன் இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு நின்று விட்டதை உறுதி செய்த மருத்துவர்கள் மூதாட்டி இறந்துவிட்டதாக அறிவித்தார்கள்.

பின்னர் பத்து மணி நேரம் சடலமாக Ksenia படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை புதைப்பதற்காக குழி தோண்டப்பட்டு இறுதிச்சடங்கு பணிகள் நடைபெற்றது.

அப்போது Ksenia-ன் உடலில் அசைவு இருப்பதை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு Ksenia திரும்பி வருகிறார்.

மரணத்தை தொட்டுவிட்டு வந்தது குறித்து அவர் கூறுகையில், இறந்த பின்னர் சொர்க்கத்தை நான் பார்த்ததோடு அங்கு இறந்துபோன என் தந்தையையும் பார்த்தேன், அவர் என்னை சொர்க்கத்துக்குள் வருமாறு அழைத்தார்.

ஆனால் திடீரென எனக்கு உயிர் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு கண்களை திறந்தேன், அப்போது வெள்ளை நிற உடையில் என்னை சுற்றி நிறைய பேர் இருந்தனர்.

அவர்கள் தேவதைகள் என நினைத்தேன், ஆனால் பின்னரே அவர்கள் மருத்துவர்கள் என தெரிந்தது என கூறியுள்ளார்.

மருத்துவர்கள் கூறுகையில், Ksenia இறந்துவிட்டதை உறுதி செய்ததோடு அவருக்கான இறப்பு சான்றிதழ் கூட தயார் செய்யப்பட்டது.

தற்போது அதை கிழித்து போட்டு ரத்து செய்துவிட்டோம், இது போன்ற ஒரு விடயத்தை நாங்கள் அனுபவித்ததில்லை என கூறியுள்ளனர்.

இது குறித்து Ksenia-வுக்கு இறுதிச்சடங்கு செய்யவிருந்த பாதிரியார் ரோமன் கூறுகையில், உயிர்தெழுதல் என்ற அதிசயம் நடந்துள்ளது, கடவுள் அந்த மூதாட்டிக்கு மீண்டு உயிர் கொடுத்துள்ளார், இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்