இனி எங்களை தொட்டால்... இது தான் கதி..! ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க நலன்களை ஈரான் ஆதரவு பெற்ற சியா போராளிகளின் தாக்குதலிருந்து தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சுலைமானி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் அரசு இந்த எச்சரிக்கைகளை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வாஷிங்டனில் பேட்டியில், சியா போராளிகள் எங்களைத் தாக்குவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யப்போகிறோம்.

ஈரானிய போராளிகளால் நிதியுதவி செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை நாங்கள் வெளிப்படையாகவே பார்த்தோம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் தற்போதும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயல்பாட்டை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

ஜனவரி 3ம் திகதி பாக்தாத்தில் ஈரானிய உயர்மட்ட ஜெனரல் சுலைமானியை கொன்ற அமெரிக்க தாக்குதலை நினைவுபடுத்திய ஓர்டகஸ், அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஈராக்கில் சியா போராளிகள் மேற்கொண்ட எந்தவொரு செயலுக்கும் ஈரான் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

ஈராக்கில் சியா போராளிகள் எடுக்கும் எந்தவொரு செயலுக்கும் தாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஈரான் அரசு அறிந்து கொள்ள வேண்டும் என்று ஓர்டகஸ் எச்சரித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்