புறப்பட்ட சில நொடிகளில் தரையில் விழுந்த விமானம்..! கூச்சலிட்ட படி உள்ளே இருந்த பயணி எடுத்த பரபரப்பு வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகதனிலிருந்து சீமச்சன் புறப்பட்ட அன்டோனோவ் 2 விமானமே இவ்வாறு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் 12 பயணிகள், 2 விமானக்குழுவினர் என மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர். விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவர் விபத்துக்குள்ளான காட்சியை படமெடுத்துள்ளார்.

அந்த காட்சியில் பனி படர்ந்த ஓடுபாதையிலிருந்து புறப்படும் விமானம், அந்தரத்தில் பறந்த சில நொடிகளிலே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் விழும் போது பயணிகள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். இந்த விபத்தில் அனைவரும் உயிர்தப்பியுள்ளனர். ஆனால், காயமடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்