ஈரானுக்கு உளவு பார்த்த கருப்பு ஆடுக்கு மரண தண்டனை.! சவுதி நீதிமன்றம் அதிரடி

Report Print Basu in ஏனைய நாடுகள்
174Shares

ஈரானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு சவுதி பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் முதற்கட்ட தண்டனை விதித்தது.

உளவு குற்றச்சாட்டில் சவுதி மாநில பாதுகாப்பு நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு சிறைத்தண்டனையும் விதித்தது.

ஈரானிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டதாக நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

கசிந்த ரகசிய தகவல்கள் சவுதி தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது மற்றும் இரண்டு வெளிநாட்டு தூதரகங்கள், அவற்றின் நுழைவாயில்கள், வெளியேறுதல் மற்றும் பாதுகாப்பு இருப்பு போன்ற தகவல்களை உள்ளடக்கியது. எனினும், எந்த தூதரகங்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரானுக்கு சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் தகவல்களை வழங்கினர். அவர்களின் சேவைகளுக்காக அவர்களுக்கு நிதி வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது என நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் உத்தியோகபூர்வ தண்டனையைத் தொடர்ந்து 30 நாட்களில் தண்டனைக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்