ஜார்ஜியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது, ஒரு பயிற்சியாளர் காட்டுப்பூனை ஒன்றை சங்கிலியால் கட்டி நாற்காலி ஒன்றின்மீது வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.
அபோது அவர் அந்த காட்டுப்பூனையை கட்டியிருந்த சங்கிலியைப் பிடித்து இழுத்து தன் கட்டளைக்கு இணங்க வற்புறுத்த, மறுத்த அந்த காட்டுப்பூனை முரண்டு பிடித்தது.
தொடர்ந்து அவர் அதைப் பிடித்து இழுக்க அது உட்கார்ந்திருந்த நாற்காலி கீழே விழ, அந்த காட்டுப்பூனையும் கீழே விழுந்தது.
உடனே கோபத்தில் அந்த பயிற்சியாளர் மீது பாய்ந்த அந்த காட்டுப்பூனை அவரைத் தாக்க, பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் பீதியில் அலறத் தொடங்கினர். அந்த காட்சி நடக்கும் இடத்தில் சுற்றிலும் வேலி கூட அமைக்கப்படாமலிருந்ததாக தெரிவித்துள்ளார் ஒரு தாய்.
அந்த சர்க்கஸில், காட்டுபூனை மட்டுமின்றி, முதலைகள், மலைப்பாம்புகள், குரங்குகள் என பலதரப்பட்ட விலங்குகள் உள்ளனவாம்.வெளியான வீடியோவைக் கண்ட பலரும், இதுபோன்று விலங்குகளை துன்புறுத்துவதை தடைசெய்யவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்


