ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போப் ஆண்டவரின் உதவியாளர் அவருடைய குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
எரிட்ரியன் வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான மிரியம் வூலோ என்பவர், போப் பிரான்சிஸின் வீட்டிலும், சாண்டா மார்டா என்ற பாதிரியார் விருந்தினர் மாளிகையிலும் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
அவர் போப்பிற்கு ஒரு வகையான நுழைவாயில் காவலராகவும், அங்கே தங்கியிருக்கும் ஆயர்கள் மற்றும் கார்டினல்களுக்காகவும் பணியாற்றியதாக இத்தாலிய பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
வூலோவிற்கு நீரிழிவு நோய் இருந்ததால் அவருடைய கர்ப்பம் ஆபத்திற்கு வழிவகுக்கலாம் என ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரித்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்கள், பிரிந்த முன்னாள் கணவர் மற்றும் வத்திக்கானில் ஒரு பொலிஸ்காரர் என்று கருதப்படும் சமீபத்திய காதலனையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.