கொரோனா அச்சத்தால் விண்வெளி வீரர் உடையில் கடைக்கு சென்ற சீன நபர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள சீனாவை சேர்ந்த ஒருவர், விண்வெளி வீரர் உடை அணிந்து கடைக்கு சென்றுள்ளார்.

கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கும் நிலையில், அதற்கு பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வைரஸ் தாக்குதலால் உலகளவில் 2711 உயிர்பலி ஏற்பட்டிருப்பதோடு, 80,400க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் லி என்று அடையாளம் காணப்பட்ட சீன நபர், வைரஸிடம் இருந்து கூடுதல் பாதுகாப்புக்காக 13 பவுண்டுகளுக்கு ஆன்லைனில் முழுவதும் உடலை மூடுவதற்காக ஆடை ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார்.

அதனை அணிந்துகொண்டு அவர் கடைக்கு செல்வதை வீடியோவாக எடுத்து அவருடைய நண்பர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையதளவாசிகள் வேடிக்கையான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்