2020 ஒலிம்பிக் ரத்து? வேறு வழியில்லை... கனடாவைச் சேர்ந்த ஐ.ஓ.சி உறுப்பினர் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதால் டோக்கியோவில் ஒலிம்பிக்கை நடத்துவது மிகவும் ஆபத்தானது என நிரூபிக்கப்பட்டால், அதை ஒத்திவைப்பதை அல்லது மாற்றுவதை விட அமைப்பாளர்கள் அதை முழுவதுமாக ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர் எச்சரித்தார்.

ஜூலை 24 ஆம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் தொடங்கவுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் ஒலிம்பிக் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினரான டிக் பவுண்ட் கூறியதாவது, டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா என்பதை தீர்மானிக்க இரண்டு மாத காலம் இருக்கிறது, அதாவது மே மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும்.

விளையாட்டு வீரர்கள் உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். உலக சுகாதார அமைப்பு மற்றும் தனிப்பட்ட அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளால் சர்வதேச ஒலிம்பிக் குழு வழிநடத்தப்படும் என்று பவுண்ட் விளக்கினார்.

நாங்கள் விளையாட்டு சிக்கல்களைக் கையாள்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், ஆனால் தொற்றுநோய் எங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒலிப்பிக்கை ரத்து செய்வது மோசமான சூழ்நிலை என்றும், ஒத்திவைத்தல் அல்லது உலகெங்கிலும் நிகழ்வுகளை மாற்றுதல் போன்ற பிற திட்டங்கள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது என்றும் பவுண்ட் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்