239 பேருடன் மலேசிய விமானத்தை மாயமாக்கிய மர்ம நபர்கள் இவர்கள் தான்! விளக்கிய பிரபல புலனாய்வாளர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

2014ம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விமானியால் தற்கொலை தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டவில்லை என பிரபல புலனாய்வாளர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து எம்.எச்.370 குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வரும் சி.என்.என் குழு உறுப்பினருமான ஜெஃப் வைஸ் கூறியதாவது, மலேசிய விமானம் மாயமானதில் உண்மையில் இரண்டு மர்மங்கள் உள்ளன.

முதல் மர்மம் யாரோ விமானத்தைத் கடத்தியிருக்கலாம். அதாவது, யாரோ ஒருவர் விமானத்தை கடத்தி வடமேற்கு திசையில் பறந்து ராடாரில் இருந்து மறைத்துவிட்டார்.

இரண்டாவது மர்மம் மிகவும் விசித்திரமானது. இது மாயமாக்கிய மர்மம். ரேடாரை விட்டு வெளியேறிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் தரவு பிரிவு எனப்படும் எஸ்.டி.யு-வை மர்மமான முறையில் இயக்கப்பட்டு மற்றும் அசாதாரணமான தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த தரவின் படி விமானம் கடலில் விழுந்ததாக காட்டுகிறது. ஆனால், கடலில் தேடியபோது எதும் கிடைக்கவில்லை.

முதல் மர்மத்தின் படி விமானி மிகவும் நம்பத்தகுந்த சந்தேக நபர். இரண்டாவதை பார்க்கும்போது, விமானி இதை செய்ததற்கான எந்த சாத்தியமும் இல்லை.

அவர் எஸ்.டி.யு-வை எவ்வாறு ரீபூட் செய்திருப்பார் என்பதற்கு எந்தவிதமான நம்பத்தகுந்த கூற்றும் இல்லை.

அவர் ரீபூட் செய்திருந்தால், நம்பமுடியாத தற்செயல் நிகழ்வுகளால் மட்டுமே அவர் விமானத்தை இன்மர்சாட் தரவை உருவாக்கும் விதத்தில் பறக்கச் செய்திருக்க முடியும். ஆனால், விமானம் விழுந்ததாக காட்டும் தேடுதல் பகுதியில் விமானம் இன்னும் கிடைக்கவில்லை.

வைஸ் தனது புத்தகமான தி டேக்கிங் ஆஃப் எம்.எச் .370ல், ஒரு ரஷ்யர், ரஷ்ய இனத்தைச் சேர்ந்த இரண்டு உக்ரேனியர்களை என மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் ஆவணங்களின்படி, மாலை 6.25 மணிக்கு எஸ்.டி.யு ரீபூட் செய்யப்பட்டிருந்தது.

இது இன்மர்சாட் செயற்கைக்கோளுடன் இணைக்க வழிவகுத்தது, இது அவுஸ்திரேலியாவின் மேற்கே இந்தியப் பெருங்கடலைத் தேட புலனாய்வாளர்களை வழிநடத்தியது.

இந்தியப் பெருங்கடலில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்த கூற்று பெரியளவில் நம்பப்படுத்தப்படுகிறது.

ஆனால் விமான பாகங்கள் ரஷ்யாவால் போடப்பட்டதாக நம்பும் வைஸ், புலனாய்வாளர்களை முட்டாளாக்க ரஷ்யாவால் எஸ்.டி.யு சிதைக்கப்பட்டதாக கருதுகிறார்.

அப்போதைய நேரத்தில் கிரிமியாவை தொடர்பான செய்திகளை மறைப்பதற்கான ரஷ்ய சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, எஸ்.டி.யு வடக்கே பறந்து கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது என்று அவர் மேலும் கருதுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...