கணவர் இறந்துவிட்டதாக நினைத்து மறுமணம் செய்த மனைவி! திடீரென திரும்பி வந்த அவரால் அப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் முதல் கணவர் உயிருடன் இருந்த போதிலும் இறந்துவிட்டதாக முடிவு செய்த பெண் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனோ மாகாணத்தை சேர்ந்தவர் ஹவா அலி (37). இவர் கணவர் பெலோ இப்ராஹிம் (45). இந்த தம்பதிக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஹவா அலியின் கணவர் இப்ராஹிமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரின் சொந்த கிராமத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

சில காலம் கணவருக்காக காத்திருந்த ஹவா அலி, அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்து பாலா அப்துல்சலம் என்ற 40 வயது நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாம் கணவருடன் ஹவாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இப்ராஹிம் உடல்நலம் தேறி சமீபத்தில் மனைவியை தேடி வந்தார்.

அப்போது ஹவா அலி இரண்டாம் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மாகாண சட்டத்தின்படி முதல் கணவர் உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது குற்றம் என்ற நிலையில் பொலிசார் ஹவா அலியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்