இவாங்க டிரம்ப் போன்று அச்சு அசல் ஆடையில் இந்திய பெண்! எப்படி? கவனத்தை ஈர்த்த புகைப்படத்தின் உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கா ஜனாதிபதியின் மகள் இவாங்கா டிரம்ப் அணிந்திருந்த உடை போன்று, கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் அணிந்திருந்த உடை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அவருடன் மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

அப்போது, இவர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தனர். இது குறித்து டிரம்ப் தாஜ்மஹாலின் பார்வையாளர்கள் பதிவு புத்தகத்தில் தாஜ்மஹாலின் பிரம்பிப்பை கண்டு வியக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று மகள் இவான்கா டிரம்பும் டுவிட்டர் பக்கத்தில் தாஜ்மாஹலைப் பற்றி புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதோடு தாஜ்மாஹல் முன் நின்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அப்போது அவர் Proenza Schouler நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த அழகான மலர்கள் நிறைந்த உடை அணிந்திருந்தார்.

இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தால், இணையவாசிகள் பலரும் அவர் அணிந்திருந்த உடையை பற்றி குறிப்பிட்டு வந்தனர்.

தற்போது இவாங்கா டிரம்ப் போன்று ஒத்து போகின்ற உடையை ஷார்ஜாவில் இருக்கும் கேரளாவை சேர்ந்த Nisha Ponthathil என்ற பெண் ஒருவர் அணிந்திருக்கிறார். ஆனால் முழு அளவில் அந்த உடை இவாங்கா டிரம்பின் உடை போன்று இல்லையென்றாலும், சற்று பார்ப்பதற்கு ஒரே மாதிரி உடை போன்று இருப்பதால், இது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து Nisha Ponthathil கூறுகையில், இவாங்கா டிரம்பின் உடையைப் பற்றி அனைவரும் பேசுவதை கண்டேன். அதன் பின் பேஸ்புக்கில் நான் விடுமுறைக்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டேன். ஆனால் அதில் நான் ஒரு வேடிக்கையான தலைப்பை பதிவிட்டேன், என்னுடைய பிராக்(புகைப்படத்தில் இருக்கும் உடை) காணவில்லை, இவாங்கா டிரம்பின் உடையை பார்க்கும் வரை என்று குறிப்பிட்டிருந்தேன்.

அது இப்படி வைரலாகிவிட்டது என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த உடை குறித்த நெருக்கமான பரிசோதனையில், இரண்டு ஆடைகள் வேறுபட்டவை என்பதை அறிய முடிந்தது. ஏனெனில், Nisha Ponthathil அணிந்திருந்த உடையில் பூக்கள் மற்றும் விடுப்பு வடிவங்களைக் கொண்டிருந்தது, இவான்காவின் உடை அலங்காரத்தில் வட்ட வடிவிலான ஸ்லீவ்ஸ் மற்றும் மலர் கிராபிக்ஸ் ஆகியவை சுருக்க வடிவத்தில் இருந்தது.

அதே சமயம் Nisha Ponthathil குறித்த உடையை கேரளாவின் கோழிக்கூட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய மதிப்பிற்கு 1000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதன் பின் அந்த உடையை கோயபுத்தூரில் தைத்துள்ளார்.

ஆனால் இவாங்க அணிந்திருந்த உடையின் மதிப்பு 1,690 டொலர். இது இப்போது ஆன்லைனில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்