கொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவர்: குவியும் பாராட்டுக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் ஒரு கடையில் மயக்கம் அடைந்த நபருக்கு வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்ஜோவில், 80 வயதான ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்துள்ளார்.

அருகாமையில் இருந்த சிலர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, ஓடிவந்த மருத்துவர் லூயோ சியாங்கே சற்றும் தாமதிக்காமல் தனது முகமூடியை கழற்றிவிட்டு முதலுதவி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

15 நிமிடங்கள் கழித்து அவருக்கு இதயத்துடிப்பு மீண்டும் தொடங்கியதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அதே கடையில் நின்றிக்கொண்டிருந்த மற்றொருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் துணிந்து செயல்பட்ட மருத்துவர் லூயோவை இணையதளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்