கொரோனா நோயாளியை பார்த்ததும் பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலி ரயில் நிலையத்தில் கொரோனா நோயாளியை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

கோவிட் 19 கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலியானோரின் எண்ணிக்கை 2800ஐ அடைய உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,000 க்கும் மேல் தாண்டியுள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அதன் தீவிரம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இத்தாலியின் புளோரன்ஸ் பிரதான ரயில் நிலையத்தில், வெனிஸிலிருந்து வந்த 66 வயதான பெண்மணி ஒருவருக்கு இருமல் வந்துகொண்டே இருந்துள்ளது.

இந்த தகவல் அறிந்த மருத்துவர்கள், கொரோனாவாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் ஹஸ்மத் உடையில் வருகை தந்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஆனால் பரிசோதனைக்கு பின், அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்