மாயமான சிறுவன்... ஜூவில் சிங்கத்தின் கூண்டிற்குள் எலும்பு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட கோரம்: நீடிக்கும் மர்மம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் லாகூர் மிருகக்காட்சிசாலையின் சிங்கம் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணாமல் போன சிறுவனின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் மிருகக்காட்சிசாலை 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் பழமையான விலங்கு பூங்காவாகும்.

சம்பவம் குறித்து மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் சவுத்ரி ஷப்காத் கூறியதவாது, செவ்வாய்க்கிழமை இரவு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 17 வயதான முஹம்மது பிலால் என்ற சிறுவனைத் தேட உதவி கேட்டு வந்தனர்.

மிகவும் தாமதமாகவிட்டது இருட்டில் தேடலைத் தொடங்குவது ஆபத்தானது என்றும் நாங்கள் அவர்களிடம் கூறினோம் என்று ஷப்காத் கூறினார்.

புதன்கிழமை காலை தேடலின் போது, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் இரத்தத்துடன் கிடந்த மண்டை ஓடு, சில எலும்புகள் மற்றும் கிழிந்த துணி துண்டுகள் ஆகியவற்றை சிங்கம் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கண்டறிந்தனர்.

bbc

அந்த துணி காணாமல் போன சிறுவனின் அணிந்திருந்தது என உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர்.

17 வயதான முஹம்மது பிலால் என்ற சிறுவன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புல் வெட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் சொன்னதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சிறுவன் எப்படி வேலியை தாண்டினார் மற்றும் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிலாலின் எச்சங்கள் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேத சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், ஊழியர்களின் திறமையின்மை தான் பிலால் இறந்ததற்கு காரணம் என உள்ளுர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் மிருகக்காட்சிசாலையின் அலுவலகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்