மெக்கா, மதீனாவுக்கு புனித பயணம் செல்ல தடை... கொரோனா பரவுவதை தடுக்க சவுதி அரேபியா அதிரடி நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக, மெக்கா மற்றும் மதீனாவுக்கு புனித பயணம் செல்ல சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விடயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச தரநிலைகளை தாங்களும் அமுல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை, புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி தெரிவித்துள்ளது.

ஆகவே, மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்து யாராவது வரும் பட்சத்தில், சுற்றுலா விசாவுடன் வருபவர்களுக்கும் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தற்காலிக நடவடிக்கைகள்தான் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு போக வேண்டாம் என்றும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சகம், மனித சமுதாயம் முழுவதையும் இறைவன் காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...