3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சீனாவின் Xiantao-வில் இருக்கும் Sanfutan Town மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu Wenxiong(50)-ம் ஒருவர்.

இவர் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறப்படும் ஹுபே மாகாணத்தில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த 13-ஆம் திகதி மன அழுத்ததால், வந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மன அழுத்ததிற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்தது தான் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் அதாவது கொரோனா வைரஸ் பீதி பரவிய பின் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 12 வரை 3,181 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார், அதில் 670 பேர் காய்ச்சலால் வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், அங்கிருக்கும் நகராட்சி நிர்வாகம், மருத்துவரின் மரணம் வேலை தொடர்பானது அல்ல என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 20 -ஆம் திகதி Xiantai நகரின் மனித வளங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு பணியகம், மரணத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், மருத்துவர் கொரோனா வைரஸ் தொடர்பாக இறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 21 அன்று 180 பேர் உட்பட ஒரு நாளைக்கு 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவர் தவறாமல் கவனித்து சிகிச்சையளித்து வந்ததாக அவரின் மனைவி கூறியுள்ளார்.

டாக்டரின் மகனானLiu Hang, கடந்த 2017 -ஆம் ஆண்டில் தனது தந்தைக்கு இதய நிலை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவ்வப்போது மார்பு வலியை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 13 ஆம் திகதி காலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர், உடனடியாக அவரின் நண்பர்களாக இருக்கும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர் காலை 6.14 மணிக்கு இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய Liu Wenxiong-வின் குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு மருத்துவர்கள் இறந்து வரும் நிலையில், தற்போது இவரின் இறப்பு கொரோனா வைரஸ் காரணமாக இல்லை என்றாலும், மருத்துவர்களின் இறப்பு தற்போதைய நிலைக்கு சீனாவுக்கு பெரிய இழப்பு என்றே கூறலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்