சரமாரியாக பொழிந்த குண்டு மழை: 22 இராணுவ வீரர்கள் பலி... ஏராளமானோர் காயம்! பதிலடிக்கு தயாராகும் துருக்கி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 22 துருக்கிய இராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் குறைந்தது 22 துருக்கிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான வீரர்கள் காயமடைந்தனர். இந்த வான்வழித் தாக்குதலுக்கு சிரிய இராணுவம் காரணம் என துருக்கியின் ஹடே மாகாண ஆளுநர் ரஹ்மி டோகன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டதாக அவர் முதலில் கூறியிருந்தாலும், சில நிமிடங்கள் கழித்து இறந்தவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக மாற்றப்பட்டது என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

வான்வழித் தாக்குதலில் அதிகமான துருக்கிய படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இதுகுறித்து துருக்கிய அதிபரின் தகவல் தொடர்பு இயக்குனர் பஹ்ரெடின் அல்தூன், "எங்கள் வீரர்களின் இரத்தம் தரையில் விடப்படாது. எங்கள் கொடிகளை நீட்டித்த கைகள் உடைக்கப்படும் வரை சிரியத் துறையில் எங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடரும்" என கூறியுள்ளார்.

அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தலைமையில் ஒரு உயர் மட்ட துருக்கிய பாதுகாப்புக் கூட்டத்தின் மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்