2 கோடிக்கு கொரோனா முகமூடிகளை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு நடந்த ஏமாற்றம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் ஏறக்குறைய 2 கோடிக்கு முகமூடிகளை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு பெரிய ஏமாற்றம் நடந்துள்ளது..

காவோ என்கிற 27 வயதான சீன பெண் ஒருவர், விரும்பிய பொருட்களை வாங்கி பின்னர் சுகாதார நெருக்கடியின் போது அவற்றை லாபத்திற்காக விற்று வந்துள்ளார்.

சமூகவலைத்தளத்தின் மூலம் முக்கியமாக அழகு சாதனங்களை விற்பனை செய்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் வெடித்த பிறகு, முகமூடிகளை வாங்க முடிவு செய்தார்.

இதனையடுத்து WeChat இல் சில்லறை விற்பனையாளர்களை தொடர்பு கொண்டார். அவர்கள் மலிவான விலையில் ஏராளமான முகமூடிகளை வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு சந்தோஷமடைந்த காவோ, 1.66 மில்லியன் யுவானுக்கு முகமூடிகளை ஆர்டர் செய்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் திகதி பார்சல் வந்தடைந்ததும் ஆசையுடன் வேகமாக திறந்துள்ளார். ஆனால் பெரும் ஏமாற்றமாக வெற்று பேட்டி மட்டுமே வந்திருந்துள்ளது.

உடனே அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தற்போது பணத்தை மீட்டு காவோவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...