கனடிய பிரதமரின் மனைவியை தொடர்ந்து மற்றொரு நாட்டின் பிரதமர் மனைவிக்கும் கொரோனா உறுதி! முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchezன் மனைவி Begona Gomezdவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தகவலை ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கனடிய பிரதமரின் மனைவிக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் மீண்டும் ஒரு பிரதமரின் மனைவியை அந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இருந்த போதிலும் பிரதமர் Pedro Sanchez மற்றும் Begona Gomezd ஆகிய இருவருமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே Pedro Sanchez அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஸ்பெயினில் இதுவரை 5753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்