வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த நபருக்கு கொரோனா! உடன் வந்த 47 தமிழர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடன் பயணித்த 47 தமிழர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.

இது குறித்து பேசிய திருவனந்தபுரம் ஆட்சியர் கூறுகையில், 47 பேருக்கும் கொரோனா அறிகுறி இருக்க வாய்ப்பு இல்லை, தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 47 பேரே அந்த விமானத்தில் பயணம் செய்து உள்ளார்கள். இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.

கடந்த 10ம் திகதி பக்ரைனில் இருந்து வந்த கல்ப் ஏர் விமானத்தில் 21 பேரும், 11ம் திகதி தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் 26 பேரும் கொரோனா பாதித்தவர்களுடன் வந்துள்ளார்கள்.

இவர்கள் பெயர் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு தமிழக சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அத்துடன் அவர்களை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளோம் என்றார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 47 பேரை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், 47 பேரின் பட்டியல் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்