கொரோனா பாதித்தவர்களிடமிருந்து தப்பிக்க நபர் செய்த வித்தியாசமான செயல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க நபர் ஒருவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 152 நாடுகளுக்கு பரவி உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நோய்க்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 5,839 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் 3,199 பேர் உயிரிழந்துள்ளனர், 80,844 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அதிடுத்தபடியாக இத்தாலியில் 1,441 பேர் பலியாகியுள்ளனர், 21,157 பேருக்கு நோய் உறுதியானது.

இவ்வாறான சூழலில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற இத்தாலி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் இத்தாலியை சேரந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்க்க தனித்துவமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார்.

பொது இடங்களில் மக்களை தொடர்புகொள்ளாமல் விலகி இருக்க தன்னை சுற்றி 1 மீட்டர் வட்டுடன் வலன் வருகிறார். குறித்த காட்சி இணைத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்