கொரோனா வைரஸால் தப்பிய இஸ்ரேல் பிரதமர்! விசாரணை ஒத்தி வைப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்
144Shares

கொரோனா வைரஸ் பரவுவதால் இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தொடங்கவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை, நீதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை காரணமாக குறைந்தது மே24 வரை தாமதமானது.

இஸ்ரேலில் 193 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நோய் பரவுவதை தடுக்க இஸ்ரேல் போராடி வருவதால், பொது இடங்களை மூடுவதோடு, பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

நீதி அமைச்சர் அமீர் ஓஹானா நாட்டின் நீதிமன்றங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தார். ஒரு சில அமர்வுகள் தவிர மற்ற அனைத்தும் தடைசெய்யப்பட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட வழக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை தொடர முடியாது, குறைந்தது மே24 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்