பத்து பக்கங்களில் வெளியான இரங்கல் செய்தி... அந்த வயதினருக்கு சிகிச்சை இல்லை: வெளியான புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனவும், அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டாம் என உயரதிகாரிகள் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இத்தாலி மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. பெர்கமோ பகுதியில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் 146 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று சுமார் பத்து பக்கங்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் துரின் பகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டாம் என்ற ரகசிய அறிவுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவசர சிகிச்சைக்கான வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு. இதில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி உள்ளது.

மிலன் நகரத்தை உள்ளடக்கிய லோம்பார்டியின் வடக்கு பகுதி கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெர்கமோ பகுதி வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் சவக்கிடங்கு நிரம்பியுள்ளது.

மட்டுமின்றி அடக்கம் செய்ய காத்திருக்கும் சடலங்கள் பொதுவாக தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மட்டுமின்றி ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை இத்தாலியில் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக ஒரு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்