நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென உயிரிழந்த பயணி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மலேசியாவிலிருந்து பஞ்சாப் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணித்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுகாம் சிங் (41) என்பவர், மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வந்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்த தகவலானது அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது மற்றும் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பிறகே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அவரது மரணத்திற்கான சரியான காரணம் அறியப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்