ஒரேநாளில் கொரோனாவிற்கு 100 பேர் பலி... பாதிக்கப்பட்டவர்கள் 2000 ஆக அதிகரிப்பு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 2000 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாளில் மட்டும் 2,000 அதிகரித்து மொத்தமாக 7,753 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இறப்பு எண்ணிக்கை 100 ஆக அதிகரித்து, இப்போது மொத்தம் 288 ஆக உள்ளது. அவற்றில் பெரும்பாலானோர் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர்கள்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக ஸ்பெயின் உள்ளது.

உலகம் முழுவதும் 162,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (சுமார் 75,000) வெற்றிகரமாக நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்