கொரோனாவை கையாள தவறிய ஜனாதிபதி ஒரு கோமாளி என கூறிய கோடீஸ்வரர்! அவர் மாயமானதால் நண்பர்கள் கவலை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா ஜனாதிபதி ஜின்பிங் கையாண்ட விதம் சரியில்லை, அவர் ஒரு கோமாளி என கூறிய கோடீஸ்வரர் திடீரென மாயமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரென் ஜிக்கியாங் என்ற கோடீஸ்வரர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவில் அதனை நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் கையாண்ட விதம் சரியில்லை, அவர் ஒரு கோமாளி என்று ரென் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் ரென் மார்ச் 12ம் திகதி முதல் மாயமாகிவிட்டதாகவும் அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரென் ஜிக்கியாங் சீனாவில் பிரபலமானவர். அவர் மாயமானது பலருக்கும் தெரிந்திருக்கிறது என்கிறார் இவர் நண்பர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ரென் ஜிக்கியாங்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது பதில் எதையும் பெற முடியாமலேயே போனது என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஜின்பிங் மேற்கொண்ட ஓர் உரையைச் சுட்டிக்காட்டி ரென் தனது கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில் ஜின்பிங் பெயரைக் குறிப்பிடாமல், மகாராஜா ஒருவர் தன் புதிய ஆடைகளைக் காட்சிப் படுத்த நிற்பது போல் தெரியவில்லை மாறாக ஆடைகளை களைந்து நிற்க வைக்கப்பட்ட ஒரு கோமாளியாகக் காட்சியளிக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்